சங்கீதா அனுமதி இல்லாமல் விஜய் குழந்தைகளுக்கு அது நடக்காது!! உண்மையை உடைத்த எஸ் ஏ சந்திரசேகர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்திற்கு பிறகு குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு அவரது அடுத்த படமான 67 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பல வதந்திகள் விஜய் குறித்து இணையத்தில் பரவி வருகிறது. பெற்றோரை கவனிக்காமல் இருந்து வருகிறார் என்றும் சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் பல விதமான செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் தந்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மருமகள் சங்கீதா மற்றும் பேரப்பிள்ளைகளை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், பேரன் சஞ்சய் இயக்குனராக வெளிநாட்டிலும், பேத்தி திவ்யா சென்னையில் 12 ஆம் வகுப்பும் படிக்கிறாள் என்று கூறியுள்ளார்.
மேலும் மகள் திவ்யா சினிமாவிற்கு வருவாரா என்று வனிதா கேட்க, அந்த விசயத்தில் அது என்னுடைய மருமகள் சங்கீதா கைக்குள் தான். அவங்களோட ஒவ்வொரு அசைவும் சங்கீதா கவனித்து கொள்கிறார்.
ஹோம் ஒர்க் செய்வது முதல் பள்ளிக்கு அழைத்து செல்வது வரை அவர் தான் எல்லாமாக இருந்து பார்த்து வருகிறார்.
மேலும், நான் எதாவது குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட, இருவரும் அம்மாவை பார்ப்பாங்க என்று வெளிப்படையாக கூறியுள்ளார் எஸ் ஏ சி. பேத்தி சினிமாவில் வருவது சங்கீதா கையில் தான் இருக்கிறது. பேரன் ஏற்கனவே இயக்குனராகிவிட்டான் என்று கூறியுள்ளார்.