சரிகமப லிட்டில் சாம்ஸ்!! மொத்தம் 4 சீசன்களின் டைட்டில் வின்னர்கள் இவர்கள் தான்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி என்றால் அது சரிகமப. இந்நிகழ்ச்சியில் லிட்டில் சாம்ஸ் 4 சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. திவினேஷ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது.
இந்நிலையில் இதுவரை நடந்து முடித்த சரிகமப 4 சீசன்களின் டைட்டில் வின்னர்கள் மற்றும் முதல் மற்றும் இரண்டு ரன்னர் அப் யார் யார் எவ்வளவு பரிசு பெற்றார்கள் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 1
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 1ன் டைட்டில் வின்னராக, விஷ்வா பிரசாத் பிடித்தார். அவருக்கு பரிசு தொகையாக 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்-ஆக திஷதனா அறிவிக்கப்பட்டு 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. ரக்தஷ் 2வது ரன்னர் அப்-ஆக அறிவிக்கப்பட்டு 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் 2
சரிகமப லிட்டில் சாம்ஸ் 2வது சீசன் டைட்டில் வின்னராக இதழிகா அறிவிக்கப்பட்டு 40 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டிச்சென்றார். அவருக்கு அடுத்து முதல் ரன்னர் அப்-ஆக ஆர்யனந்தா பிடித்து 1 கிலோகிராம் தங்கம் பரிசாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. 2வது ரன்னர் அப்-ஆக பவின் வினோத் மற்றும் சஹானா இருவருக்கும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு பரிசு தொகையாக 3 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. 3வது ரன்னர் அப்-ஆக 50 ஆயிரம் ரூபாயை பெற்றார் பிரவஸ்தி.
சரிகமப லிட்டில் சாம்ஸ் 3
சரிகமப லிட்டில் சாம்ஸ் 3ன் டைட்டில் வின்னராக கில்மிஷா அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்-ஆக ருத்ரேஷ் குமார் அறிவிக்கப்பட்டு 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2வது ரன்னர் அப்-ஆக சஞ்ஜனா அறிவிக்கப்பட்டு 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 3வது ரன்னர் அப்-ஆக ரக்ஷிதா ஜவஹர் அறிவிக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்பட்டது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்-ஆக யோகஸ்ரீ அறிவிக்கப்பட்டு வீட்டு மனை பரிசாக வழங்கப்பட்டது. 3வது ரன்னர் அப்-ஆக மலேசியாவை சேர்ந்த ஹேமித்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
