இயக்குநர் பாலாவை நம்பினேன்!! சாட்டை பட நடிகரின் தற்போதைய நிலை..
யுவன்
தமிழில் வெளியான சாட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் யுவன். பல படங்களில் நடித்து வந்த யுவன், ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார். சமீபத்தில் யுவன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், சென்னை பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்து வருவதாக தெரிவித்துள்ளார். நான் இதுவரை 13 படம் நடித்துள்ளேன். ஆனால் யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை, சினிமாவில் லக் இருந்தால் தான் வெற்றி பெறமுடியும்.
பாலாவை நம்பினேன்
அது காலம் கடந்து தான் தெரியவந்தது. சாட்டை படத்திற்கு பின் கம்பேக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால் எதுவும் கைக்கூடவில்லை. சாட்டை படத்திற்கு பின் இயக்குநர் பாலா இயக்கத்த்தில் ஒரு படத்தில் கமிட்டாகினேன். பாலா படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
யாரிடமும் இதை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன். ஒருநாள் என்னை பாலா சார் அழைத்து போட்டோஷூட் நடத்தினார். அவரே பிரமோஷனுக்காக போட்டோக்களை எடுத்து வெளியிட்டது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது.
திடீரென படம் டிராப் ஆனது, படப்பிடிப்பு நடப்பதற்கு முன்பே இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு எப்படி ரியாக்ட் செய்வதுன்னு தெரியவில்லை, பால் சார் படத்தை ரொம்பவே நம்பினேன் என்று யுவன் தெரிவித்துள்ளார்.