விஜய், மனைவி சங்கீதாவை பிரிந்தது உண்மையா? எஸ் ஏ சந்திரசேகர் கொடுத்த ரியாக்ஷன்..
விஜய், மனைவி சங்கீதா
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபடவுள்ளார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல விஷயங்களை செய்து வரும் விஜய் பற்றி, சில முரண்பாடான கருத்துக்களும் தனிப்பட்ட விஷயத்தை பற்றியும் செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.
அப்படி விஜய், தன் அப்பாவை முழுவதும் ஒதுக்கிவிட்டார்? மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டார் விஜய்? என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
எஸ் ஏ சந்திரசேகர்
இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் தொகுப்பாளினி எஸ் ஏ சந்திரசேகரிடம், விஜய் அவர்கள் அரசியலில் இறங்கிவிட்டார், சங்கீதா மேம் என்ன சொல்றாங்க என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ் ஏ சந்திரசேகர், வேண்டாம் வேண்டாம் என்று அந்த கேள்வியை ஒதுக்கி இருக்கிறார் எஸ் ஏ சந்திர சேகர்.
