சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசெண்ட் போட்டோஷூட்..
பிரபலங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு சமூகவலைத்தளங்களின் பயன்பாடு தற்போது எளிதாகிவிட்டது. பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுடன் தங்கள் விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் அதிகரித்துவிட்டது. ஆனாலும் பிரபலங்கள் பற்றிய சில வதந்திகளும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி விடுகிறது.
சாரா டெண்டுல்கர்
அப்படி ஒருசில வதந்திகளில் சிக்கியவர் தான் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர். சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இணைத்து செய்திகள் பரவியது. இது ஒருபக்கம் இருக்கையில் தற்போது சாரா டெண்டுல்கர் பற்றிய புதிய செய்தி இணையத்தில் பரவியது.
சாரா டெண்டுல்கர் கோவையை சேர்ந்த சித்தார்த் கெர்கரை காதலிப்பதாகவும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் பரவியது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சாரா டெண்டுல்கர் தான் ஆரம்பித்த உடற்பயிற்சி தொழில், ஆஸ்திரேலியாவின் சுற்றுலா விளம்பரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
அக்டோபர் 12 ஆம் தேதி தன்னுடைய 28வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது கியூட்டாக ரியாக்ஷனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்.