100 சதம் விளாசிய சச்சின்!! உலகின் முதல் கிரிக்கெட் மைதானத்தில் செஞ்சுரியே அடிக்கவில்லையாம்..

Sachin Tendulkar Cricket Indian Cricket Team Cricket Record
By Jai Nov 01, 2026 06:59 AM GMT
Report

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் எக்கச்சக்கமான சாதனைகளை படைத்திருக்கிறார்.

100 சதம் விளாசிய சச்சின்!! உலகின் முதல் கிரிக்கெட் மைதானத்தில் செஞ்சுரியே அடிக்கவில்லையாம்.. | Sachin Tendulkar Never Scored A Century At Lords

உலக புகழ்பெற்ற மைதானங்களில் சதங்களை விளாசித்தள்ளிய மாஸ்டர் பிளாஸ்டர் கிரிக்கெட்டின் முதல் மைதானமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் தன் வாழ்நாளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் மொத்தம் 8 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

அதில் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெறும் 195 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறாராம். அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 45 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் சச்சின் சர்வதேச அரங்கில் 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை அடித்து முடிசூடா மன்னனாக திகழ்கிறார்.

100 சதம் விளாசிய சச்சின்!! உலகின் முதல் கிரிக்கெட் மைதானத்தில் செஞ்சுரியே அடிக்கவில்லையாம்.. | Sachin Tendulkar Never Scored A Century At Lords

அப்படி 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய சச்சின் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் மோசமான ரெக்கார்ட் வைத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சினுக்கு தனி மியூசியம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.