சிவகார்த்திகேயனை வைத்து சாய்பல்லவிக்கு தூண்டில் போட்ட கமல்ஹாசன்! பிறந்தநாள் சர்ப்ரைஸ்-ஆமே?

Kamal Haasan Sivakarthikeyan Sai Pallavi
By Edward May 10, 2022 04:49 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் ஜூன் 10 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் கமல்ஹாசனும் இயக்குனரும் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இடையில் கமல் ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம் இண்ட்ர்நேஷனல் தயாரிப்பில் பல படங்களை தயாரிக்கவுள்ளார். அதற்காக பல இயக்குனர்களின் கதையை கேட்டு பா ரஞ்சித், உள்ளிட்டவர்களுடன் இணையவுள்ளராம்.

இதைதொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தினையும் தயாரிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் பிரபல தொலைக்காட்சி வழியாக அறிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் நேற்று நடிகை சாய் பல்லவி பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று ஒரு டிவிட் போட்டிருந்தார் கமல்ஹாசன். தற்போது அந்த தகவலை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாரிக்கும் பிரடொக்‌ஷன் 51 என்று பெயரிடப்பட்ட படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் முதன்முதலில் ஜோடி சேர்வது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.