அஜித், விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க!! சாய் பல்லவி பதிலடி..

Ajith Kumar Vijay Sai Pallavi
By Edward Oct 14, 2024 07:45 PM GMT
Edward

Edward

Report

சாய் பல்லவி

மலர் டீச்சராக பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய சாய் பல்லவி, மருத்துவத்தை விட்டுவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித், விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க!! சாய் பல்லவி பதிலடி.. | Sai Pallavi Did Not Say No To Act With Vijay Ajith

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, உலக நாயகன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் பிரமோஷனுக்கு சமீபத்தில் படக்குழுவுடன் இணைந்து பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் சாய் பல்லவி அஜித், விஜய்யுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக தகவல் வெளியானது.

அஜித், விஜய் No

இதையறிந்த சாய் பல்லவி இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகள், விஜய், அஜித்துடன் நடிக்க விருப்படுவார்கள்.

அஜித், விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க!! சாய் பல்லவி பதிலடி.. | Sai Pallavi Did Not Say No To Act With Vijay Ajith

அப்படித்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால் இந்த நிமிடம் வரை இருவருடனும் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்புகள் வரவில்லை.

நிலைமை இப்படி இருக்கும்போது நான் எப்படி அவர்களோடு நடிக்க விருப்பமில்லை என்று சொல்வேன். இப்படி நடக்காத விஷயத்தை நடந்ததுபோல் சித்தரித்து பேசுவது ரொம்பவே தவறு என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை சாய் பல்லவி.