உயிரை கொடுத்து நடித்த சாய் பல்லவிக்கு தேசிய விருது இல்லையா!! கொந்தளுக்கும் ரசிகர்கள்..
Nithya Menen
Sai Pallavi
Gossip Today
National Film Awards
By Edward
ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது. அந்தவகையில் 2022 ஆம் ஆண்டிற்காகன 70வது தேசிய திரைப்பட விருதுகள் நெற்று அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்திருக்கிறது. அதில் சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனனும் மானசி பரேக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரைக்கொடுத்து கார்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி ஏன் தேசிய விருது வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிப்பெற்ற கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு இந்த விருது சரியாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.





