சாய் பல்லவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.. அதிர்ச்சி தகவலை கூறிய இயக்குநர்
Sai Pallavi
Actress
By Kathick
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியான சாய் பல்லவி கடந்த ஆண்டு அமரன் படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இதில் மும்பையில் இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், இதில் சாய் பல்லவி கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறுகையில், "நடிகை சாய் பல்லவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அதை பொருட்படுத்தாமல் பட நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். இதனால் சோர்வடைந்த சாய் பல்லவி ஓய்வு எடுக்கிறார். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை" என கூறியுள்ளார்.