உடம்பை மறைத்தால் தான் நல்ல பொண்ணா!! கடுப்பாகி பேசிய நடிகை சாய் பல்லவி
மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மலர் என்ற கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார்.

அடக்கவுடக்கமான சேலையில் நடிக்கும் நடிகையாக கலம் கண்டு வரும் சாய் பல்லவி, விஜய், அஜித் படங்களின் வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்திருப்பது சமீபத்தில் மிகப்பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்கள் மீதான அவதூறும் மற்றும் பாலியல் தொல்லைகள் குறித்து சாய் பல்லவி பேசியுள்ளது வைரலாகி வருகிறது. நான் உடலை மறைத்தபடி ஆடை அணிவதால் என்னை நல்ல பொண்ணு என்றும் வேறொருவர் மாடர்ன் ஆடை அணிந்தால் கெட்ட பொண்ணு என்றும் நினைப்பது தவறான ஒரு விசயம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் குட்டை ஆடையணிவது பிடித்திருந்து அதை போட்டுக்கொண்டாள் அவளுக்கு அது விருப்பமாக இருக்கும்.

ஏனென்றால் இந்த உலகத்தில் யாரும் தன்னை தப்பாக பார்க்கமாட்டார்கள் என்றும் அம்மாவை போல் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்று அவள் நம்புகிறாள்.
அதை என்னால் உடைக்க விரும்பம் இல்லை. நீ அந்த ஆடையை போடக்கூடாது, அந்த அங்கிள் தவறாக பார்க்கிறார் தப்பாக நடப்பார் என்று அவளை பயமுறுத்தவில்லை என்று பேசியிருக்கிறார். ஒருவர் தவறாக நடந்து கொண்டால் உள்ளுக்குளே வைத்துக்கொள்ளாமல், அந்த சூழலில் நடக்கும் தொந்தரவை உன்னுடைய துணி போல் நினைத்து எறிந்துவிடு என்று உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.