அவுங்களோட அந்த இடம் அழகா இருக்கும், ரசிச்சு பாத்துருக்கேன்.. தயக்கமே இல்லாமல் அதை கூறிய சாய் பல்லவி
தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாள பிற மொழி படங்களில் பிஸியாக இருந்து வரும் நாயகி தான் சாய் பல்லவி.
டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடனம் மீதும், நடிப்பு மீதும் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் சினிமாவில் நுழைந்தார். தற்போது சாய் பல்லவி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஒரு பேட்டி ஒன்றில்கலந்துகொண்ட சாய் பல்லவி இடம், சைட் எல்லாம் அடிப்பீங்களா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சாய் பல்லவி "பொண்ணுங்களத்தான் நான் அதிகமா ரசிச்சு பாத்திருக்கேன்.
பொண்ணுங்கள பாக்கும்போது, ட்ரெஸ்ஸிங் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, முடி அழகா பண்ணீருக்காங்க, கண் அழகாருக்கு அப்படீன்னு பாப்பேன். பசங்கன்னா அதே பேண்ட் ஷர்ட் தானே. அதனால் பொண்ணுங்கள இன்னும் ரசிச்சு பாத்துருக்கேன்" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.