திருமணம் ஆகாத நடிகருடன் முதல் முறையாக இணையும் சாய் பல்லவி.. சூப்பர் ஜோடி தான்
Silambarasan
Sai Pallavi
By Kathick
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் கடந்த வாரம் வெளியான தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இவருடைய நடிப்பு சிறந்து விளங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல முன்னணி நடிகருடன் முதல் முறையாக சாய் பல்லவி இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை நடிகர் சிம்பு தான். ஆம், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் STR 49.
இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக சிம்புவும் - சாய் பல்லவியும் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார்கள்.