அக்கா சாய் பல்லவி திருமணத்திற்கு முன்பே காதலருடன் ரொமான்ஸ்!! தங்கச்சி பூஜா கண்ணன் வெளியிட்ட வீடியோ..
மலையாளத்தில் கடந்த 2015 வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தத படம் பிரேமம். இப்படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி.
பிரேமம் படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

31 வயதான சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். சமீபத்தில் கூட சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரம் செவ்வானம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகினார் பூஜா.
தற்போது தன் காதலரை முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் பூஜா கண்ணன். அக்கா சிங்கிளாக இருக்கும் போது தங்கை பூஜா கண்ணன் காதலருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும் அக்காவே திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள், அதுக்குள்ள உங்களுக்கு கல்யாணமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.