23 வயதில் திருமணம், 2 குழந்தைகளுக்கு தாயாக ஆசைப்பட்ட சாய் பல்லவி!! கல்யாணத்தை தள்ளிப்போட இதுதான் காரணமா.. '

Sai Pallavi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 29, 2024 05:33 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in Celebrity
Report

பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் பல்லவி. தென்னிந்திய படங்களில் பிஸி யாகா நடித்து வரும் சாய் பல்லவிக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவுக்கு நிச்சியதார்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

23 வயதில் திருமணம், 2 குழந்தைகளுக்கு தாயாக ஆசைப்பட்ட சாய் பல்லவி!! கல்யாணத்தை தள்ளிப்போட இதுதான் காரணமா..

தற்போது 31 வயதாகியம் சாய் பல்லவி ஏன் திருமணத்தை தள்ளி போடுகிறார் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சாய் பல்லவி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய 23வயதில் திருமணம் செய்து கொண்டு 30 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்பதை என்னுடைய ஆசையாக இருந்தது. பின்னர் அந்த முடிவுகளை நான் மாற்றிவிட்டேன். எங்கள் வீட்டில் சில முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய பொறுப்பு இருந்தது. ஒரு நடிகையாக நல்ல பெயர் கிடைத்துவிட்டதும். திருமணத்தை தள்ளிவைத்து விட்டேன் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.