அந்த வீடியோ தான் பிரச்சனை.. ஷாக்கிங் தகவலை பகிர்ந்த நடிகை சாய் பல்லவி

Sai Pallavi Tamil Cinema Viral Video Actress
By Bhavya Oct 25, 2024 02:30 PM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

 சாய் பல்லவி 

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மருத்துவருக்கு படித்த இவர் சினிமா மேல் உள்ள ஆசையால் நடிக்க வந்து விட்டார்.

அழகான சிரிப்பு, சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்த இவர் நடிப்பில் அடுத்த வாரம் 31 - ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று அமரன் படம் வெளியாக உள்ளது.

அந்த வீடியோ தான் பிரச்சனை.. ஷாக்கிங் தகவலை பகிர்ந்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi Talk About Hot Scenes

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்து என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது, அமரன் படம் குறித்து பல பேட்டிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஷாக்கிங் தகவல்

அந்த வகையில், பேட்டி ஒன்றில் சாய் பல்லவி அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், "பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன் வெளிநாட்டில் நான் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்.

அதில் நடனத்திற்காக கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஆடினேன். ஆனால் பிரேமம் படம் வெளியான சமயத்தில் பலர் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட தொடங்கினர்.

அந்த வீடியோ தான் பிரச்சனை.. ஷாக்கிங் தகவலை பகிர்ந்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi Talk About Hot Scenes

அப்போது தான் இனி இது போன்று செய்யக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். மேலும், எனக்கு உடலை காட்டி தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்னை இந்த லுக்கிலேயே பலர் ரசித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.