விஜய் படத்தில் அரைகுறையில் ஆடவேண்டும்!! வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல நடிகை..

Vijay Sai Pallavi Varisu
By Edward Feb 25, 2023 07:00 AM GMT
Report
240 Shares

பிரேமம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மலர் என்ற கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார்.

அடக்கவுடக்கமான சேலையில் நடிக்கும் நடிகையாக கலம் கண்டு வரும் சாய் பல்லவி, விஜய், அஜித் படங்களின் வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்திருப்பது சமீபத்தில் மிகப்பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சில மேடைகளில் விஜய் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை உதாசீனப்படுத்தி இருக்கிறாராம் சாய் பல்லவி.

அந்தவகையில், முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தால் அரைகுறையாக பாடலுக்கு ஆட சொல்வார்கள் என்று வாய்ப்பினை தூக்கி எறிந்துள்ளாராம். அதேபோல், நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

You May Like This Video