எனக்காக இயக்குநர் அதை செய்தார்..சாய் பல்லவி தான்.. நடிகை சமந்தா விளக்கம்..
Sai Pallavi
Samantha
Indian Actress
By Jai
தென்னிந்திய சினிமாவை தாண்டி டாப் நடிகையாக பாலிவுட் சினிமா அறிமுகமாகி சென்சேஷனல் நடிகையாக மாறியிருப்பவர் தான் நடிகை சமந்தா.

அவர் நடிப்பில் 'மா இன்டி பங்காரம்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து சில கருத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
மா இன்டி பங்காரம்
அதில், உண்மையை சொல்லப்போனால் சாய் பல்லவி அவர்கள் தான் 'மா இன்டி பங்காரம்' படத்தில் நடித்திருக்க வேண்டும், ஆனால் அவர் தொடர்ந்து மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இப்படம் எனக்கு வந்தது.

எனக்காக இப்படத்தின் கதையில் மாற்றங்களை செய்திருந்தார்கள். நிச்சயம் இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் என்று மா இன்டி பங்காரம் படத்தில் நடிக்க காரணம் என்ன என்று ரசிகரின் கேள்விக்கு சாய் பல்லவி பதிலளித்துள்ளார்.