1300 கோடி சொத்து.. கரீனா கபூரின் கணவர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!! அதிர்ச்சியில் பாலிவுட்..
சைஃப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலிகான். அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து, நடிகை கரீனா கபூரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் சைஃப் அலிகான் தற்போது 100 கோடி மதிப்பிலான மும்பை பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சைஃப் அலிகானுக்கு 1300 கோடி ரூபாய் சொத்துள்ள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் முக்கிய பகுதியான பாந்த்ராவில் பிரம்மாண்ட வீட்டில் கரீனா கபூருடன் வசித்து வரும் சைஃப் அலிகான் வீட்டின் செக்யூரிட்டியை எல்லாம் தாண்டி திருடர்கள் சிலர் உள்ளே புகுந்துள்ளனர்.
கத்திக்குத்து
திருடர்கள் உள்ளே புகுந்ததை அறிந்த சைஃப் அலிகான் மடக்கிப்பிடிக்க நினைக்கும் போது கத்தியால் குத்திவிட்டு திருடர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
கத்திக்குத்துவுடன் நடிகர் சைஃப் அலிகான், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாலிவுட் சினிமாவையும் மும்பை பகுதியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.