7 ஆண்டு திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்

Divorce Saina Nehwal
By Kathick Jul 14, 2025 04:30 AM GMT
Report

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் நாட்டிற்கு பல பெருமைகளை தேடி தந்துள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன் தொடரில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்.

7 ஆண்டு திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் | Saina Nehwal Announces Separation From Husband

2015ம் ஆண்டு மகிழ் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக மாபெரும் உச்சத்தை தொட்டார். இவர் கடந்த 2023ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டு திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் | Saina Nehwal Announces Separation From Husband

சாய்னா நேவாலுக்கும், முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப்புக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 7 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

7 ஆண்டு திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் | Saina Nehwal Announces Separation From Husband

ஆனால், பருபுல்லி காஷ்யப்பு இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரும் அமைதி, வளர்ச்சி நோக்கி வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

7 ஆண்டு திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் | Saina Nehwal Announces Separation From Husband

இதன்மூலம் இந்திய முன்னாள் பருபள்ளி கஷ்யப் உடனான சாய்னா நேவாலின் 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.