சில காரணங்கள் செட்டாகவில்லை..பேசிதான் விவாகரத்து செஞ்சோம்!! பாடகி சைந்தவி..

G V Prakash Kumar Divorce Tamil Singers Saindhavi
By Jai May 21, 2026 06:45 AM GMT
Report

ஜிவி பிரகாஷும் சைந்தவியும்

பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஜிவி பிரகாஷும் சைந்தவியும். அன்வி என்ற மகள் பிறந்த சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சில காரணங்கள் செட்டாகவில்லை..பேசிதான் விவாகரத்து செஞ்சோம்!! பாடகி சைந்தவி.. | Saindhavi Opens Up About Divorce With Gv Prakash

என்னதான் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் தங்களின் மகள் அன்விக்காக இருவரும் நண்பர்களாக நீடித்து வருகிறார்கள். சமீபத்தில் சைந்தவி அளித்த பேட்டியொன்றில், விவாகரத்து பற்றியும் அதன்பின் நடப்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

பேசிதான் விவாகரத்து

அதில், யாருக்குமே திருமணம் செய்துவிட்டு விவாகரத்து பெற வேண்டும் என்ற ஆசை இருக்காது. இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் சில காரணங்களால் அது ஒர்க்கவுட் ஆகவில்லை.

சில காரணங்கள் செட்டாகவில்லை..பேசிதான் விவாகரத்து செஞ்சோம்!! பாடகி சைந்தவி.. | Saindhavi Opens Up About Divorce With Gv Prakash

அதனால் தான் இருவரும் பேசித்தான் பிரிந்தோம். நண்பர்களாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதேபோல் இன்னும் நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.

நல்ல நண்பர்களாக இருக்கிறோம், எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைத்துதான் விவாகரத்து செய்தோம். ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை இருக்கிறது, எங்களுக்குள் வெறுப்பும் இல்லை, தேவையில்லாத பேச்சுக்களும் இல்லை. எனக்கு என்னுடைய மகள் தான் பாசிட்டிவ் எனர்ஜி என்று சைந்தவி தெரிவித்துள்ளார்.