ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

Atlee Kumar Sakshi Agarwal Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 02, 2024 04:30 PM GMT
Report

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். தற்போது இவர் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் | Sakshi Agarwal Compliant Atlee

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாக்ஷி அகர்வால் ராஜா ராணி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நான் மாடலிங் செய்து வந்து சமயத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னுடைய காஸ்டிங் ஏஜென்சி மூலமாக என்னை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது பற்றி பேசினார்கள்.

அவர்கள் என்னிடம் ஆர்யா ஹீரோ, நீங்கள் இரண்டாம் ஹீரோயின் என சொன்னார்கள். அவர்கள் கூறியது போல இரண்டு நாள் ஷூட்டிங் சென்றேன். அதை அடுத்து அவர்கள் என்னை அழைக்கவில்லை.

கடைசியில் பார்த்தால் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ரிலிஸ் ஆகிவிட்டது. இது தொடர்பாக நான் இயக்குனர் அட்லீ இடம் பேசி இருக்க வேண்டும் ஆனால் அப்படி செய்யாமல் விட்டது பெரிய தவறு என்று சாக்ஷி அகர்வால் தெரிவித்து உள்ளார்.  

You May Like This Video