என்னாது சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதா.. அவரே சொன்ன தகவல்!!

Indian Actress Sakshi Agarwal Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 20, 2024 01:45 PM GMT
Report

நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டார், அங்கு அவர் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவான பகீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

என்னாது சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதா.. அவரே சொன்ன தகவல்!! | Sakshi Agarwal Reply To Rumours

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை சாக்ஷி அகர்வால், "நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தபோது, எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அவர் என்னை விவாகரத்து செய்துவிட்டு, இப்போது நியூசிலாந்தில் வசிக்கிறார் போன்ற வதந்திகள் வந்தது. அது மட்டும் இல்லாமல், திருமண புகைப்படம் மார்பிங் செய்து வெளியானது".

"தொடர்ந்து என்னை பற்றி எதாவது பொய்யான தகவல்கள் வந்துகொண்டு இருந்தது. அதை எல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருக்கும்" என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.