பட வாய்ப்பு இல்லை, வேறொரு விஷயத்தில் கிளாமராக இறங்கிய சமந்தா! கோடிக்கணக்கில் சம்பளம்..
Samantha
By Kathick
சமந்தா பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நாயகி ஆவார். இவர் தற்போது படங்களில் எதுவும் நடிக்கவில்லை.
காரணம் அவருக்கு மயோசிடிஸ் நோய் தான். இதற்கான சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா, எந்த படத்தையும் தேர்வு செய்யவில்லை.
தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் சமந்தா விளம்பரங்களில் ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆம், தற்போது ஐஸ் க்ரீம் விளம்பரம் ஒன்றில் நீச்சல் உடையில் நடித்துள்ளார் சமந்தா.
படங்களில் நடிப்பதற்காக ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சமந்தா, இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதற்காக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.