மாறிய முகம்!!! மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் பிரபல நடிகருடன் அவுட் சென்ற நடிகை சமந்தா...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் சுதந்திர பறவையாக மாறி படங்களில் கவனம் செலுத்தியும் கிளாமர் லுக்கிற்கு மாறியும் நடித்து வந்தார்.
இதற்கிடையில் கடினமாக உழைத்ததால் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக எழுந்து கூட நடக்க முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் அதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் சமந்தா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின் உடற்பயிற்சியை மேற்கொண்ட வீடியோ, படத்தின் புகைப்படங்கள் என்று பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் கதாநாயகனுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார்.
அவர் பூஜைக்கு சென்ற புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், பழைய முகம் அப்படியே வந்திருக்கு என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
You May Like This Video







