இனி எந்த அளவுக்கு இறங்க தயார்? வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா!
தென்னிந்திய சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தமிழின் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து 12 வருட சினிமா வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.
சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை விட்டு விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் இதுவரையில்லாத சமந்தாவாக அனைவருக்கும் புது சமந்தாவாக பிரதிபளித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு படுமோசமான ஆட்டத்தை ஆடியது போன்று புஷ்பா 2வில் ஆடமுடியாது என்று கூறியிருந்தார்.
தற்போது தன்னைவிட 2 வயது குறைவான நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடிப்போடவுள்ளாராம். மஜிலி படத்தின் இயக்குனர் சிவா நிர்வானா இப்படத்தினை இயக்க மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தினை இசையமைப்பாளர் அனிருத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரம் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏன்கனவே விஜய் தேவரகொண்டா - சமந்தா மகாநடி படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.