புஷ்பா 'ஊ சொல்றியாவை' தொடர்ந்து மீண்டும் களமிறங்குகிறாரா சமந்தா? ரசிகர்கள் ரெடியா

Samantha Tamil Cinema Pushpa: The Rise Actress
By Bhavya Aug 09, 2025 08:30 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். நடிகை சமந்தாவின் நடிப்பை தாண்டி அவருடைய நடனத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ''ஊ சொல்றியா'' பாடலில் நடனமாடி கவனம் ஈர்த்தார்.

புஷ்பா

ரசிகர்கள் ரெடியா?  

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடனமாட தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  

புஷ்பா