கணவருடன் விவாகரத்து எழுந்த சர்ச்சை! சமந்தாவின் ரியாக்ஷன் இதுதான்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். போல்ட்டான கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சர்ச்சையான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த காட்சிகளும் தி பேமிலி மேன் 2 படத்தின் காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக மன்னிப்பும் கேட்டுகொண்டார் சமந்தா. இந்நிலையில், இந்த நிகழ்வுகளால் தன் கணவருக்கும் சமந்தாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றதாக தகவல் வெளியாகி வைரலானது. இதுகுறித்து சமந்தா இணையத்தில் எதையும் என் பதிலால் நோண்ட மாட்டேன் என்று கூறியிருந்தார்.
தற்போது பிரபல தனியார் ஊடகம் அவரின் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். கணவர் விவகாரம் குறித்து விளக்கமளியுங்கள் என்று கேட்டுக்கொண்ட ஊடகம் சம்பந்தப்பட்டவருக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தவிர்த்துள்ளார் நடிகை சமந்தா. இதனை ஸ்கிரீஷாட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். தற்போது இச்செய்தி வைரலாகி வருகிறது.