பணக்கஷ்டத்தால் தவித்த குடும்பம்! சூழ்நிலைதான் சமந்தாவை நடிகையாக்கியதா?

samantha tamilcinema nagachaitanya
By Edward Jun 08, 2021 07:30 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் தெலுங்கு ரீமேக் படத்தில் கதாநாயகியாகினார் சமந்தா. பின் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

இதையடுத்து இளம் நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். பல எதிர்ப்புகளை மீறி ஃபேமிலி மேன் 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தினால் சமந்தாவை சினிமாத்துறையை சேர்ந்த சிலரும் கோபத்தில் திட்டி வந்துள்ளனர்.

சென்னை பல்லாவரம் பெண்ணாக இருந்து ஸ்டீபன் மெட்ரிக் பள்ளியில் படித்த சமந்தா எப்போது முதல் இடம் தானாம். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளனர். இதனால் 20 வயதிலேயே சமந்தா மாடலிங் துறையை தேர்வு செய்தாராம். நடிகையாக விருப்பம் இல்லாமல் நடிகையாக நடித்தாராம். பின் அடுத்தடுத்த படவாய்ப்புகள் பெற்று வந்தார்.

தற்போது தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைளுக்கான பிரத்யுஷா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தியும் வருகிறார். மேலும் பெண்கள் சம்பந்தபட்ட ப்யூட்டி பாரலரையும் நடிகரும் அவரது கணவருமான நாக சைத்தன்யாவின் ஜிம்மின் பங்குதாரராகவும் இருந்து வருகிறாராம் சமந்தா.