விவாகரத்துக்கு பின் சமந்தா உடம்பில் இப்படியொரு நோயா.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்
Samantha
By Kathick
சமந்தா
நடிகை சமந்தா சில வாரங்களாக சமூக வலைதளத்தில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்யாமல் இருந்து வந்தார். அவருடைய முகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக தான் அவர் எந்த ஒரு புகைப்படத்தை பதிவிடுவதில்லை என்று தகவல் வெளியானது.

இப்படியொரு நோயா
அதற்கு ஏற்றாற்போல் தன்னுடைய முகத்தை மறைத்து புகைப்படம் ஒன்று சமந்தா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிப்படி புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். myositis எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கான சிகிச்சையில் இருக்கிறாராம்.

விரைவில் குணமடைந்து வலிமையுடன் வீடு திரும்புவதாக அதில் சமந்தா தெரிவித்திருக்கிறார். சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.