அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவிற்கு அறுவை சிகிச்சை.. வருத்தத்தில் ரசிகர்கள்

Samantha Actress
By Kathick Jul 07, 2023 04:30 AM GMT
Report

சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இதன்பின் அதற்கான சிகிச்சையை பின்பற்றி நோயில் இருந்து மீண்ட வந்த சமந்தா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நடிகை சமந்தாவிற்கு அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

USAவில் இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறதாம். இதனால் தொடர்ந்து 6 மாதம் எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொள்ள போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.