மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் சமந்தா இப்படி மாறிட்டங்களே... இப்போது எங்கு இருக்கார் தெரியுமா..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. அப்படத்தினை அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
தற்போது கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தாவுக்கு, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாமல் அவதியுற்றார்.
இதனை பேட்டிகளில் பகிர்ந்து ஷாக் கொடுத்தும் இருந்தார். இந்நிலையில் அதற்காக தீவிர சிகிச்சை பெற்றும் உடற்பயிற்சி செய்தும் வந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறார். சமீபகாலமாக கடுமையான உடற்பயிற்சி, பாக்ஸிங் செய்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது உத்ரகண்ட் பகுதிக்கு ஷூட்டிங்கிற்கு சென்றுள்ள சமந்தா, சிவராத்தி சமயத்தில் ஆன்மீகத்திற்காக அங்கிருக்கும் பிரபல ஆஷ்ரமத்திற்கு சென்று வழிப்பட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
