மூன்று வருட திருமண வாழ்க்கை !நடிகை சமந்தா அந்த பெயரை நீக்க என்ன காரணம்!

samantha nagachaitanya familyman2 akkineni
By Edward Aug 10, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தமிழ், தெலுங்கு என பிஸி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடித்து வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் எதிர்ப்புகளை மீறி வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வந்தது. அப்படத்தில் சமந்தாவின் தைரியமான காட்சிகளில் நடித்தது பெரியளவில் பேசப்பட்டது.

காதல் திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவின் சம்மதத்துடன் படங்களில் நடித்து வரும் சமந்தா சில தினங்களுக்கு முன் சமந்தா அவரின் பெயரில் சேர்த்து கொண்ட அக்கினேனி என்ற பெயரை எடுத்துவிட்டு வெறும் S என்ற ஆங்கில எழுத்தை மட்டும் வைத்துள்ளார். இப்படி செய்ததற்கு என்ன காரணம் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமந்தாவின் நடவடிக்கையில் நடிகர் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும் தி பேமிலி மேன் 2வில் படுமோசமான காட்சிகளும் காரணமாக இருக்கும் என்று செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து சமந்தா எந்தவொரு பதிலையும் கொடுக்கவில்லையாம்.

இதனால் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. மேலும் சிலர் சகுந்தலம் என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா அப்படத்தின் முதல் பெயரை வைத்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். கேள்விக்குறியாக இருக்கும் சமந்தாவின் நிலைப்பாடு போகபோகத்தான் என்ன ஆனது என்று தெரியவருமாம்.