கோடிகளில் புரளும் நடிகை சமந்தாவின் 38வது பிறந்தநாள்.. இத்தனை கோடி சொத்து சேர்த்துள்ளாரா?

Samantha Net worth
By Kathick Apr 28, 2025 04:30 AM GMT
Report

கிளாமராக பாடலுக்கு நடனமாட வேண்டும் என்றாலும் சரி, ஆக்ஷன் காட்சிகளிலும் அனைவரையும் பந்தாட வேண்டும் என்றாலும் சரி அதற்கு சரியான ஒரே ஆள் நடிகை சமந்தா தான்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் சமந்தாவின் 38வது பிறந்தநாள் இன்று. திரையுலகை சேர்ந்தவர்களும், அவரது ரசிகர்களும் சமந்தாவிற்கு சமூக வலைத்தளங்களில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கோடிகளில் புரளும் நடிகை சமந்தாவின் 38வது பிறந்தநாள்.. இத்தனை கோடி சொத்து சேர்த்துள்ளாரா? | Samantha Net Worth Details On Her Birthday

38வது பிறந்தநாளை கொண்டாடு நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ரூ. 101 கோடி சொத்து சேர்ந்துள்ளாராம் சமந்தா. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். வெப் சீரிஸில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

ஹைதராபாத்தில் சமந்தாவிற்கு சொந்தமான 3BHK பிளாட் உள்ளது. இதன் விலை ரூ. 7.8 கோடி என கூறுகின்றனர். அதே போல் மும்பையில் சமந்தா வாங்கியுள்ள 3BHK வீட்டின் விலை ரூ. 15 கோடியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.