சமந்தா இல்லாமல் சாய் பல்லவியுடன் பார்ட்டிக்கு சென்ற நாகர்ஜுனா குடும்பத்தினர்! புகைப்படம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை நாக சைதன்யா அக்கினேனி. நாகர்ஜுனாவின் மூத்த மகனாக தெலுங்கில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக் மூலம் பிரபலமானார். இதையடுத்து சமந்தாவுடன் காதல் ஏற்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது சில காரணங்களால் இருவருக்கும் விவாகரத்து என கிசுகிசுக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
சமந்தா - நாக சைதன்யா இதுபற்றி எந்த கருத்துக்களும் கூறாமல் இல்லை என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களிடன் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினரிடம் சில மாறுதல்கள் இருப்பதாகவும் நடவடிக்கைகளில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி வருகிறார்கள் சிலர். அதேபோல் சமீபத்தில் நாக சைதன்யாவுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் அழைக்கப்பட்டு தன் குடும்பத்தினருடம் பார்ட்டி கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த கொண்டாட்ட பார்ட்டியில் நடிகை சமந்தா இல்லாமால் அமலா, நாகர்ஜூனா, அகில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் சமந்தா மட்டும் கலந்து கொள்ளாமல் இருந்தது சிலரிடன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து சமந்தா அக்கினேனி குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தையில் இல்லை என்று கூறி வருகிறார்கள் தெலுங்கு வட்டாரங்கள்.
