முன்னாள் காதலை மறக்காத ஜோடி!! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை டெலீட் செய்யாத சமந்தா..

Samantha Naga Chaitanya Gossip Today Divorce Sobhita Dhulipala
By Edward Aug 13, 2024 04:32 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்தி நடித்து வரும் நடிகை சமந்தா, தற்போது வருண் தவானுடன் சிடெடல் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை சமந்தா கடந்த 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர்.

முன்னாள் காதலை மறக்காத ஜோடி!! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை டெலீட் செய்யாத சமந்தா.. | Samantha Not Removed Photos Ex Hus Naga Chaitanya

சட்டப்பூர்வமாக 2021 விவாகரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து தங்கள் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்கள். சமந்தாவும் நாக சைதன்யாவின் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை இணைய பக்கங்களில் இருந்து டெலீட் செய்தனர் ஆனால் ஒரு சில புகைப்படங்களை மட்டும் இருவருமே டெலீட் செய்யாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தத்தை முடித்த நாக சைதன்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

முன்னாள் காதலை மறக்காத ஜோடி!! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை டெலீட் செய்யாத சமந்தா.. | Samantha Not Removed Photos Ex Hus Naga Chaitanya

இந்நிலையில் நாக சைதன்யா 2018ல் முன்னாள் காதல் மனைவி சமந்தாவுடன் ரேஸ் காரில் எடுத்த புகைப்படத்தை இன்னும் டெலீட் செய்யாமல் வைத்திருக்கிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது புகைப்படத்தை டெலீட் செய்யுங்கள் என்று கூறி வருகிறார்களாம்.

அதேபோல் நடிகை சமந்தா திருமணத்திற்கு பின் எடுத்த பல புகைப்படங்களை டெலீட் செய்தார். ஆனால் நாக சைதன்யாவுக்கு திருமணத்தின் போது கட்டியணைத்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நாக் சைதன்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிய பதிவினை இன்று வரை டெலீட் செய்யவில்லை.

மேலும் ஒருசில திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படங்களையும் நடிகை சமந்தா டெலீட் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery