விவாகரத்துக்கு பின் ஒருவரை கூட நம்பமுடியல..ஆனா!! மனம் திறந்த நடிகை சமந்தா..
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதற்கிடையில் மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இயக்குநர் ராஜ் ரெடிமொருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமானது வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற சமந்தா, அடுத்த கையோடு மா இன்டி பங்காரம் என்ற படத்தில் கமிட்டாகினார்.
அப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ஸ்டண்ட் காட்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியொன்றில், விவாகரத்தானது பற்றி பகிர்ந்துள்ளார்.

விவாகரத்துக்கு பின்
அதில் சமந்தா, விவாகரத்துக்கு பின் மீண்டும் ஒருவரை நம்புவது சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். ஆனால், ராஜ் நிதிமோருவின் அன்பும் புரிதலும் தான் வாழ்க்கை மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது நட்பு என்னை மெதுவாக குணப்படுத்தியது என்று ஓபனாக பகிர்ந்துள்ளார் சமந்தா.