ஜோதிகாவை தொடர்ந்து நடிகை சமந்தாவுடன் ஜோடியான 72 வயது நடிகர்!! வைரலாகும் வீடியோ
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தமிழில் பாணாக்காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் 4 ஆண்டுகளான நிலையில் கடந்த 2021ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து சட்டப்பூர்வமாக பிரிந்தார். அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தி கிளாமர் ரூட்டுக்கு மாறிய சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கிட்டத்தட்ட அந்த நோயில் முழுமையாக வெளியேறியிருக்கும் சமந்தா, பாலிவுட் படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார். சமீபத்தில், அமேசான் பிரைம் நடத்திய நிகழ்ச்சியில் சமந்தாவும் நாக சைதன்யாவும் 3 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்டனர். இந்த விசயம் ஒரு பக்கம் இருக்க பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் காலில் நடிகை சமந்தா விழப்போனதும் பேசு பொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியுடன் ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. செஸ் விளையாட்டு விளையாடுவது போன்று இருவரும் பேசிக்கொண்ட விசயமாக விளம்பர வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மம்மூட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்ததை அடுத்து அவருடன் நடிகை சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. தற்போது கிளாமர் லுக்கில் 72 வயது நடிகருடன் விளம்பரத்தில் ஜோடி சேர்ந்தது ரசிகர்களுக்கு சற்று வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
New Ad #Mammootty and #SamanthaRuthPrabhu ?❤️?#Samantha | #Mammukka
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 21, 2024
pic.twitter.com/uDLhoLYDuv