நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம்.. அந்த விரலை காட்டிய சமந்தா!!
Samantha
Naga Chaitanya
Tamil Actress
Sobhita Dhulipala
Actress
By Dhiviyarajan
நடிகை சமந்தா, கடந்த 2017 -ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அண்மையில் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் பற்றி பலரும் பல விதமாக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் சிலர், சமந்தா இப்படி நோயில் போராடி கொண்டு இருக்கும் சமயத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யலாமா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுவிரலை காட்டி ஒரு போட்டோ வெளியிட்டு உள்ளார்.
சமந்தா, நாக சைதன்யாவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை போட்டாரா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.