நாக சைதன்யா பிரபல நடிகையுடன் ரகசிய டேட்டிங்.. இதற்கு சமந்தா கொடுத்த மாஸ் பதில்
Samantha
Naga Chaitanya
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் 2017 -ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடச்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமந்தா மாஸ் பதில்
சமீபத்தில் நாகா சைதன்யா சோபித துலிபாலாவை டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் "யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்று சமந்தா கூறியதாக பத்திரிகையில் வந்துள்ளது.
இதற்கு சமந்தா, " நான் இது போன்று சொல்லவில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023