முன்னாள் கணவருக்கு லீகல் நோட்டீஸ்!! சமந்தாவின் அதிரடி முடிவு.. அப்படி என்ன ஆச்சு?

Samantha Naga Chaitanya Divorce Actress
By Bhavya Nov 01, 2024 09:30 AM GMT
Bhavya

Bhavya

in Gossip
Report

சமந்தா -  நாக சைதன்யா

நடிகர் நாக சைதன்யா முன்னணி நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் ஷோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து வந்தார். சமீபத்தில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

முன்னாள் கணவருக்கு லீகல் நோட்டீஸ்!! சமந்தாவின் அதிரடி முடிவு.. அப்படி என்ன ஆச்சு? | Samantha Send Legal Notice To Naga Chaitanya

விவாகரத்திற்கு பின் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தா நாக சைதன்யாவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்றை அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து திருமணத்திற்கு பின் பிளாட் ஒன்றை வாங்கினார்கள்.

முன்னாள் கணவருக்கு லீகல் நோட்டீஸ்!! சமந்தாவின் அதிரடி முடிவு.. அப்படி என்ன ஆச்சு? | Samantha Send Legal Notice To Naga Chaitanya

அது அவர்கள் இருவரின் கனவு வீடாகவே இருந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு அந்த பிளாட்டில் யாரும் தங்குவது இல்லை. தற்போது, சோபிதாவுடனான திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா அங்கு குடியேற இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அந்த இடத்திற்கு செல்வதன் மூலம் சமந்தாவின் நினைவு வரும் என்பதால் ஷோபிதா சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

லீகல் நோட்டீஸ்

இந்நிலையில், அந்த பிளாட்டிற்கு நாக சைதன்யாவை விட சமந்தா தான் அதிகம் செலவு செய்ததாகவும், அவர் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்த பின் நாக சைதன்யாவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனால் கண்டிப்பாக ஒரு பிரச்சனை வெடிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.