தனிமையில் நாயுடன் தான் சாகப்போற?விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவுக்கு சாபம் விட்ட நபர்

Samantha Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக தோழிகளுடன் அவுட்டிங், ஒர்க்கவுட், ஷூட்டிங் என பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பினை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பினார்.

தற்போது தனிமையில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் சமந்தா நாயுடன் ஒர்க்கவுட் எடுத்த புகைப்படத்தோடு இவ்ளோ நாள் மிஸ் பண்ணியதாக கூறி பதிவினை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ஒரு ரசிகர்கள், கடைசி வரைக்கும் நாய், பூனையுடன் இருந்து சாகப்போகிறார் என்று கருத்தினை தெரிவித்திருந்தார்.

இதற்கு சமந்தா, அப்படி நடந்தால் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுவேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த நபர் மெசேஜை டெலீட் செய்துவிட்டார். இதனை ரசிகர்கள் பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு கண்டபடி திட்டி வருகிறார்கள்.

Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.