அந்த காட்சியால் எழுந்த சர்ச்சை! மன்னிப்பு கேட்டு விலகிய நடிகை சமந்தாவின் வீடியோ..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் படுமோசமான காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய அடுத்த சில வருடங்களிலேயே, தி பேமிலி மேன் 2 சீசனில் பல காட்சிகளில் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால் பலர் எதிர்ப்புகளை சந்தித்த சமந்தா இதுபற்றி பேட்டியொன்றில் சில விஷயங்களை ஆதங்கமாக கூறியுள்ளார். அப்படியான காட்சிகளில் நடித்து யாருக்காவது புண்பட்டு இருந்தால் மன்னித்து விடுங்கள். யாரை காயபடுத்திட இந்த காட்சிகளில் நடிக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன் என்றும் பேசியுள்ளார். மேலும், சில காலம் ஓய்வு எடுக்கபோவதாகவும் கூறியுள்ளார்.
என் நடிப்பை பார்த்து வடக்கில் இருக்கும் மக்கள் பாராட்டினார்கள். மற்ற மொழிகளிலும் நடிக்க தயாராகவே இருக்கிறேன் என்றுகூறியுள்ளார். பெண்களை பற்றியும், இலங்கை தமிழர்களை பற்றியும் இழிவாக பேசப்பட்டதாக புகார் எழுந்து தி பேமிலி மேன் 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Really enjoyed this interview ?Thankyou @FilmCompanion @anupamachopra ♥️ https://t.co/scfXCb3JU9
— S (@Samanthaprabhu2) August 25, 2021