நெருப்பாக பொங்கிய சமந்தா! அவரே வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான நடிகைகள்!

samantha familyman2
By Edward Jun 09, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி பேமிலி மேன் 2. வெப் தொடராக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது.

அதற்கு காரணம் இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக சில காட்சிகள் அமைந்துள்ளதாகவும் படத்தின் மீதும் சமந்தா மீதும் கண்டனங்கள் உருவாகியது. இதைமீறி படம் சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியாகியது.

சமந்தாவின் போல்டான நடிப்பு மற்றும் சில காட்சிகளை பார்த்து பலர் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இப்படத்தில் சமந்தா டப் போடாமல் ஸ்டண்ட் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். சண்டைக்காட்சிகளில் இப்படி நடித்தது தனக்கு ஊக்கமளித்துள்ளது என ஸ்டண்ட் மாஸ்டர் யாப்னிக் பென்னிற்கு நன்றியை தெரிவித்து அந்த காட்சிகளை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

இதற்கு சினிமா நடிகைகளான, ரகுல் ப்ரீத் சிங், ராஷிக மந்தனா, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வர், லாவண்யா, விமலா ராமன் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.