இதயம் நொறுங்கிவிட்டது!! வைரலாகும் சமந்தாவின் பதிவு..ரசிகர்கள் ஆறுதல்..

Samantha Actors Tamil Actors Paris 2024 Summer Olympics
By Dhiviyarajan Aug 08, 2024 12:00 PM GMT
Report

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில், மகளிர் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் கலந்துகொண்டார்.

சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதியான இவர், 100 கிராம் கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இது குறித்து பேசிய வினேஷ் போகத், தாயே, என்னை மன்னித்து விடுங்கள்.. மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோல்வியடைந்தேன். உங்கள் கனவுகளும், என் தைரியமும் முறிந்து போய்விட்டது. இனி சண்டையிட எனக்கு சக்தி இல்லை என்று வினேஷ் போகத்சோகமான பதிவை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, வினேஷ் போகத்தின் பதிவை பகிர்ந்து, இதயம் நொறுங்கிய எமோஜியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.    

You May Like This Video