38 வயது இந்தி நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா.. இவர்களுடன் மற்றொரு இளம் ஹீரோயின்
சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அறிவோம். தி பேமிலி மேன் வெப் தொடரில் நடிக்க துவங்கினார்.
இந்த வெப் தொடர் சர்ச்சையில் சிக்கினாலும் பாலிவுட்டில் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், சமந்தா கமிட்டாகியுள்ள புதிய வெப் தொடர் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் தொடரை தயாரிக்கிறார்கள்.
இதில் சமந்தா பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆதித்யா ராய் கபூர் என்பவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதல் முறையாகும். மேலும் இப்படத்தில் நடிகை வாமிகா கேபியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.