இதெல்லாம் தேவையா?.. அட்லீயை பங்கமாக கலாய்த்த நடிககை சமந்தா...
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தற்போது இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி தொடர்ந்து வெப் தொடர்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சமந்தா அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பெரிதாக அறிவிப்பும் எதுவும் வரவில்லை. தொழிலில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா, பிக்கிள் பால் விளையாட்டில் சென்னை அணியை வாங்கி வழிநடத்தியுள்ளார்.
அட்லீ
இந்நிலையில் இயக்குநர் அட்லீயும் பெங்களூரு அணியை விலைக்கு வாங்கியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, அட்லீயின் குழந்தையை வாஞ்சையோடு அணைத்துக் கொள்ளும் சமந்தா, அட்லீயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது அவரை பார்த்து, ஹய்யோ ஹய்யோ தேவையா இந்த ஸ்ட்ரெஸ்ஸு என்று கலாய்க்கிறார். இதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.