அப்பா இறந்த ஒரே வருஷத்தில் சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்!! வீட்டில் நடக்கும் ஏற்பாடு..பயில்வான்..
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று ட்ரெண்ட்டிங் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பாலிவுட்டில் வருண் தவானுடன் சிடெடல் படத்தில் நடித்து ரிலீஸ் ஆகும் போது அவரது தந்தை மரணமடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
ஏற்கனவே விவாகரத்து, மயோசிடிஸ் நோய் என்று கஷ்டங்களை சந்தித்து வந்த சமந்தாவுக்கு தந்தையின் இழப்பு மிகப்பெரியளவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். சமந்தாவின் வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு சோகம் நடந்தது என்றால் அது அவரது தந்தை உயிரிழந்ததுதான். அவர் இறந்தப்பின் சமந்தாவின் தாயும் சகோதரர்களும் வீட்டில் அமர்ந்து பேசினார்கள்.
இரண்டாவது திருமணம்
அப்போது சமந்தா இனி இப்படி தனியாகவே இருக்கக்கூடாது, எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி தங்களது உறவினர் வட்டத்திலேயே அவருக்கு ஒரு பையனையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று பயில்வான் கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.
ஆனால் சமந்தா சமீபத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை, முதல் திருமணத்தில் நடக்கும் விவாகரத்துக்களைவிடவும் இரண்டாம் திருமணத்தில் நடக்கும் விவாகரத்துக்கள் தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.