விவாகரத்துக்கு பின் புது மோதிரம் போட்டுள்ள நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த சமந்தா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
நாக சைதன்யா விவாகரத்து
கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டு திருமண வாழ்க்கையை விவாகரத்து பெற்று முடித்துக்கொண்டனர். அதன்பின் படங்களில் நடித்தும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
மயோசிடிஸ்
கடந்த 8 மாதங்களாக உடல் நிலை மோசமாகியதோடு 4 மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் எழுந்து கூட நடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியிருந்தார். அதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டில் தங்கியிருக்கிறார்.
தற்போது மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் உடற்பயிற்சியை அதிகமாக செய்து வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் பாம்பு மோதிரம் ஒன்றினை தனது கையில் போட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து புதிய மோதிரத்தை பார்த்த ரசிகர்கள், ஆன்மீக மோதிரமா? இல்லை வேறொருவர் போட்ட மோதிரமா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.