நடிக்கவே முடியாதுன்னு மிரட்டிய தயாரிப்பாளர்..பரிபோன கமல் பட வாய்ப்பு!! நடிகர் சம்பத் ராம்..
பிரபலமானவர் தான் நடிகர் சம்பத் ராம். சமீபத்தில் தான் சினிமாவில் நடிக்கவே முடியாதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டப்பட்ட சமபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நான் கமல் ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் அவருடன் இருக்கும் 7 பேரில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தேன்.
சம்பத் ராம்
அதில் கமிட்டாவதற்கு 3 மாதத்திற்கு முன், சரத்குமாரின் சத்ரபதி படத்தில் வில்லன் ரோலில் நான் ஒப்பந்தமானேன். ஒரு 10 நாட்கள் அப்படத்தின் ஷூட்டிங் சென்ற நிலையில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட 6 மாசம் செல்ல முடியவில்லை.

சத்ரபதி பட தரப்பும் மெயின் வில்லன் என்பதால் வேறு படத்தில் கமிட்டாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட வாய்ப்பு வந்தது. இவ்வளவு பெரிய சான்ஸை விட முடியுமா? என்று நினைத்து சத்ரபதி பட தயாரிப்பு கம்பெனியிடம் சென்று நான் விஷயத்தை கூறினேன்.
கமலுடன் நான் நடித்தது இல்லை, மிகப்பெரிய படம் என்பதால் கேட்டேன். அவர்களும் சரி போய் நடிங்க, பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

மிரட்டிய தயாரிப்பாளர்
வசூல் ராஜா படத்துக்கு 40 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். ஒரு 10 நாட்கள் ஷூட்டிங் சென்றிருக்கும், திடீரென சத்ரபதி பட ஷூட்டிங் தொடங்கியது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் போய் நீங்கள் சொல்லித்தானே கமல் படத்தில் நடிக்கப்போனேன்.
மிகப்பெரிய படமாச்சே என்று நான் சொல்ல, அந்த விஷயம் பட தயாரிப்பாளர் காதுக்கு செல்ல, என்னை அழைத்தார். நீங்க வந்தே ஆகணும், அப்படி வராவிட்டால் இங்கே மட்டுமல்ல எங்கேயும் நடிக்க முடியாது என்று மிரட்டிவிட்டார். இதனால் நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தைவிட்டு விலகும் சூழல் ஏற்பட்டது.
அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மன புழுங்கிப்போன நேரம் என்று சொல்லலாம். அதை மட்டும் செய்திருந்தால் படம் முழுக்க வரும் கேரக்டர் தான், 3 பாடல்களில் நான் வந்தேன், ஆனால் ஒரு பாடலில் தான் நடித்தேன். சத்ரபதி படம் பெரிய படம் தான், ஆனால் அதைவிட வசூல் ராஜா படம் மிகப்பெரியது என்று கூறியிருக்கிறார்.